Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், அவைத்தலைவர் வெங்கடாச்சலம், கவுன்சில ர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த், நகர மீனவர் அணி செயலாளர் செல்வமுரளி, குரு, கிட்டான் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் 1000–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், தம்பி மனோகரன், இணை செயலாளர் சி.பி.வசந்தா மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மீனவரணி செயலாளர் தங்கமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ்,
வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, சதீஷ், பி.கே.முத்து, வி.கே.பி.மணி, வே.அய்யாசாமி, வே.கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், அன்னபூரணி, கோமதி,. கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, கீதா, சந்திரசேகர், கலைமகள் கோபால், சண்முகசுந்தரம், சுபா மோகன், ஆனந்தன், பேபி தர்மலிங்கம், கேபிள் சிவா, பிரியா சக்திவேல், சபரி, விஜயகுமார், வேலுசாமி, அமுதா வேலுமணி, நகர இளைஞரணி கண்ணபிரான், ஹரிஹரசுதன், உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ்.கண்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, சரவணன், நீதி ராஜன், தேவராஜ், கேபிள் பாலு,
பாஸ் என்கிற பாஸ்கரன், ருக்குமணி, சத்யா, சரஸ்வதி, முத்துலட்சுமி, வசந்தி, செல்வம் தங்கவேல், கருத்தம்மா, பனியன் ருக்குமணி, மல்லிகா, சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) காலை 9 மணியளவில் அவினாசி புதிய பஸ் நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், நகர செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: