Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
Displaying DSC_0873.JPG


                                                            மதுரையில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நியமனத்திற்காக கூட்டத்தினை முன்னிட்டு அதன் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் ,ஐ நா பொது சபை கூட்டத்தில் 26 ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உணர்வாளர்களை ஒன்றிணைத்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட உள்ளதாகவும் இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள தாக கூறினார் .தமிழக மீனவர் பிரச்சனையில் முந்தய காங்கிரஸ் அரசை விட மிக மோசமாக மோடி தலைமையிலான அரசு நடந்து கொண்டு வருகிறது ,மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறினார் .சுங்க சாவடிகளில் தொடர் கட்டண வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது .இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் .கூடிய விரைவில் சுங்க சாவடிகளை அகற்றும் போராட்டம் நடத்திட உள்ளோம் .சுங்க சாவடியை 50 மீட்டருக்குள் அமைத்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் .இதில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,தமிழர் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார் .

0 comments: