Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    





உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க  முடியாமல்  அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம்,  உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அடுத்த கல்லாமொழியை  சேர்ந்தவர் வேம்படிமுத்து (80). இவரது மனைவி முத்துக்கனி (75).  இவர்களுக்கு 6 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று  மதியம் முத்துக்கனி திடீரென இறந்தார். இதனையடுத்து தோட்டத்திற்கு  தண்ணீர் பாய்க்க சென்ற தந்தை வேம்படிமுத்துவிடம் தாயார் இறந்த  செய்தியை கூறி அழைத்து வர அவரது மகன் சென்றார்.

வேம்படிமுத்துவிடம் தாய் முத்துக்கனி இறந்த செய்தியை கூறவே  அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து  அங்கேயே இறந்தார்.  மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல்  கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: