Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
திருப்பூர்:திருப்பூரில் டிசம்பர் இறுதிக்குள் வியாபார கடைகள் மற்றும் வீடுகளை நைஜீரியர்கள் காலி செய்யவேண்டும் என திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் நேற்று நடந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். தலைவர் சுந்தரம், துணை தலைவர் குமார், பொருளாளர் கந்தசாமி, துணை செயலாளர் சித்திக், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், திருப்பூரில் வசிக்கும் நைஜீரியர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. எனவே டிசம்பர் இறுதிக்குள் நைஜீரியர்கள் வியாபார கடைகள், வீடுகள் மற்றும் கம்பெனிகளை காலி செய்ய வேண்டும், நைஜீரியர்கள் பனியன் துணிகளை வாங்கி செல்லுவது மட்டுமே நடைபெற வேண்டும், மேலும் கடந்த ஆண்டு காதர் பேட்டையில் கடைகளை காலி செய்து விட்டு சரக்குகளை வாங்கி செல்லும் வர்த்தகர்களாக வந்து செல்லுவதாக உறுதியளித்து நைஜீரியர்கள் கடைகளை காலி செய்தனர். அதன் பிறகு புதிதாக வந்த நைஜீரியர்கள் மீண்டும் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு நடக்காவிடில், காதர் பேட்டை வியாபாரிகள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும், தற்போது காதர் பேட்டைக்குள் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், தார்சாலைகள், மின் விளக்கு சரி செய்யப்படாமலும் உள்ளது.  இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

0 comments: