Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
 




திருப்பூர், : திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தலைமறைவானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக் டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (52). இவர், தனது குடும்பத்துடன் திருப்பூர் பாளையக்காடு, சஞ்சய் நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், தனது மனைவி பரிமளா பெயரில், கடந்த 15 வருடங்களாக பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை வாரம், மாதம் என பணத்தை வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில், அப்பகுதியில் உள்ள கோல் டன் நகர், சஞ்சய் நகர், சூர்யா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் இரு ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் ஏலச்சீட்டு மூலமாக பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஏலச்சீட்டு முடிவடைந்து, பலநாட்களாகியும் பாலசுப்ரமணி பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்கும் போதெல்லாம் ஒரு மாதத்தில் தந்து விடுவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வீட்டைகாலி செய்து விட்டு பாலசுப்ரமணி தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து, ஏலச் சீட்டு நடத்தி மோ சடியில் ஈடுபட்டு தலைமறைவான பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.

0 comments: