Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளி களை கைது செய்ய, வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண் டும் என்று உறவினர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.மதுரை சின்னசொக்கி குளம் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால்முகமது, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலரால் கொடைக்கானலுக்கு கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பூங்கொடி, கணேசன் உள்பட சிலர் கைது செய்யப் பட்டனர்.சங்கர் உள்பட சிலர் நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தபோது, கொலைக் கான காரணங்கள் தெரிய வந்தது. இதன் அடிப்படை யிலும் சிலர் கைது செய்யப் பட்டனர்.இந்த நிலையில் ஜமால் முகமது கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்ய வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண் டும் என்று அவரது உற வினர் முகமது முஸ்தபா வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இணை இயக்குனர் ஆகியோருக்கு அவர் மனு அனுப்பி உள்ளார். அதில் எனது மாமா ஜமால் முகமதுவை ஒரு கும்பல், பணம் பறிக்கும் நோக்கத்தில் கொடைக்கானல் மலைக்கு அழைத்து சென்று கொலை செய்ததாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனால் அவரது கொலைக்கு முன்பாக, அவர் நிர்வாகம் செய்து வந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 64 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் எழுதி வாங்கிய தாக தெரிய வருகிறது. எனது மாமா கொலை வழக் கில் போலீசார் முக்கிய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.அவர்கள் இந்த வழக்கை திசைதிருப்பும் நோக்கில், சங்கர் என்ற நபரை கோர்ட்டில் சரண் அடைய செய்து விசாரணையை நீர்த்து போகச் செய்யும் முயற்சி நடக்கிறது. எனவே வழக்கின் புலன் விசாரணையை மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.)க்கு மாற்றி னால்தான் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்.மாமா (ஜமால் முகமது) வின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது மதுரை அரசு ஆஸ்பத்திரி யின் தடய அறிவியல் நிபுணர் கள் உடன் இருக்கவும், இறந்துபோன மாமாவின் உடல் பாகங்களை, உரிய விஞ்ஞானபூர்வமான பரி சோதனைகள் செய்து கொலை தொடர்பான உரிய உத்தரவை பிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.இதேபோல் ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் பஷீர்ஆகமது, ஜாக் அமைப் பின் மாநில தலைவர் இமாம் உசேன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகிகள், இன்று மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்க வந்தனர்.அந்த மனுவில், ஜமால் முகமது கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் பிடிக்கப்படாமல் உள்ளனர்.இந்த கொலையில் அரசியல் வாதிகள், செல்வந்தர்கள் போன்றோருக்கு தொடர்பு உள்ளது. எனவே வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என  வேண்டுகோள் விடுத் துள்ளார்

0 comments: