Sunday, September 07, 2014

On Sunday, September 07, 2014 by Unknown   


தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. எம். வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட முதலமைச்சரின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திரு. வெங்கய்ய நாயுடு, மழைநீர் சேகரிப்பு, சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

0 comments: