Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown   


சென்னை மந்தவெளி பாக்கத்தில் உள்ள தென் சென்னை கேஸ் ஏஜென்ஸியில் கேஸ் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.  இதனால் பொதுமக்கள் பெரிதும்  சிரமத்திற்குள்ளாகின்றனர்.  தென் சென்னை கேஸ் ஏஜென்சி பொது மக்களுக்கு விற்க்கவேண்டிய சிலிண்டர்களை கள்ள தனமாக டீ கடை, ஓட்டல், இங்கு எல்லாம் விற்க்கபடுகின்றது.  பொது மக்கள் கேஸ் சிலிண்டர் வேண்டும் என்று கேட்டால்1 மாதத்திற்குமேல் ஆகும் என்று கேஸ் ஏஜென்சி சொல்லிவருகின்றனர்.  ஆனால் அங்கு உள்ள கேஸ் ஊழியர்கள் சிலிண்டர் ஒன்றுக்கு 1200/- விதம் விற்க்கப்படுகின்றது.  இதை அங்கு உள்ள ஏஜென்சி க்கு தெரியபடுத்தியும், புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று பொது மக்கள் கூறுகின்றனர்.  இதனால் தென் சென்னை கேஸ்ஏஜென்சி, பொது மக்களுக்கு உடனே சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.  இதனை கண்டுக்கொள்ளுமா மத்திய அரசு? என எதிர்பார்க்கின்றனர். இல்லாத பட்சத்தில் தனித்து போராடவும் தயாராகி வருகின்றனர்

0 comments: