Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    
மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் வீட்டில் எரிந்த நிலையில் பெண் உடல்மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவரது வீட்டில் இருந்து இன்று காலை புகை வந்துள்ளதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தல்லாகுளம் போலீசார் ஆயுதப்படை குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ்காரர் மகேந்திரனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு வீட்டுக்குள் ஒரு பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆனந்தி (வயது32) என்பதும், கே.கே.நகரைச்சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து ஆனந்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் போலீஸ்காரர் மகேந்திரன் வீட்டில் தீயில் எரிந்து இறந்துள்ளார். அவர் இங்கு வந்தது எப்படி? தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
தற்போது போலீஸ்காரர் மகேந்திரன் மாயமாகி விட்டார். அவர் சிக்கினால் தான் இளம்பெண் சாவின் உண்மை நிலவரம் தெரியவரும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பிற்குள் போலீஸ்காரர் வீட்டிலேயே இளம்பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: