Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    


வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் அமைய உள்ள அம்மா உணவகத்தை, காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அம்மா உணவகத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இப்பணிகளை காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து நகராட்சி பொறியாளர் கே.சரவணன் கூறுகையில், நவீன நீராவி அடுப்பு, அரிசி, பருப்பு மற்றும் ஒரே சமயத்தில் 240 இட்லிகளை வேகவைக்கும் சாதனம், சமையல் பாத்திரங்களைக் கழுவி கிருமி நீக்கும் இயந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு, குடிநீர் குளிர்விக்கும் கருவி, 12 உணவருந்தும் டேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் இந்த உணவகம் செயல்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் விரைவில் இந்த உணவகத்தை திறந்து வைக்க உள்ளார் என்றார்.
ஆய்வின் போது, நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி, நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கட்டட சங்கத் தலைவர் ஆர்.மணி, துணைத் தலைவர் யு.ஏ.சரவணன், கவுன்சிலர் வைகை கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments: