Friday, October 03, 2014
திருப்பூர், அக்.3-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு தெரிவித்து, அக்.4 சனிக்கிழமை திருப்பூரில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய சங்கங்களின் சார்பாக ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சூழ்நிலையில், கடந்த நான்கைந்து நாட்களாக ஆளும்கட்சியினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர் அமைதியான முறையில் உண்ணாவிரதம், கறுப்புச் சட்டை அணிதல் போன்று செயல்படுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால், நீதிமன்றம் சட்டரீதியாக தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை ஆட்சேபிப்பதாக இருந்தால், சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனநாயகரீதியாக கருத்து சொல்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த விசயத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் திருப்பூர் போன்ற பல லட்சம் தொழிலாளர் உழைக்கும் நகரில், இதுபோன்ற காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தம் செய்வது,தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பை ஏற்படுத்தும், பொது மக்களுக்கு மேலும் பலவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.
ஆகையால், பொது மக்கள் நலன் கருதி இந்த உற்பத்த நிறுத்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழ் மொழிதான் என தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ச...
0 comments:
Post a Comment