Sunday, October 12, 2014

On Sunday, October 12, 2014 by Unknown in ,    
இந்தியாவில் பல்வேறு தொழில்களில் அன்னிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி பட்டதாரிகள், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கான தேவை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை அழகர்கோவில் அருகிலுள்ள லதா மாதவன் பாலிடெக்னிக்கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்குமுதல்வர் தவமணி தலைமையில் நடைபெற்றது. மாணவர் வள மேம்பாட்டு பயிற்றுநரும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான சூரியகுமார் மாணவர்கள் சுய திறன் வளர்ச்சி குறித்து பேசுகையில், ஜப்பானும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு நம் நாட்டில் முதலீடு செய்கின்றன. இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள், உதிரிப் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மூலப்பொருளை முடிவுற்ற பொருளாக மாற்றும் தொழிற்சாலைகள் என இரண்டாம் நிலைத் தொழில்களைச் செய்யும் தொழிற்சாலைகளை இந்தியா முழுவதும் தொடங்க இந் நாடுகள் தயாராகி வருகின்றன.
இத் தொழிற்சாலைகளுக்கு ஸ்கில்டு லேபர் என்று சொல்லப்படக் கூடிய தொழில் திறன் பெற்றவர்கள் அதிகம் தேவைப்படுவர். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் இந்த தொழில்திறன் பெற்றவர்களாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் இவர்களையே அதிகம் விரும்பும். ஆனாலும், இம் மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த நடைமுறை அறிவையும், தொழில் அறிவையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாலிடெக்னிக் முடித்த ஸ்கில்டு லேபர் தேவை இப்போது இருப்பதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவில் சிவில் துறையின் தலைவர் மற்றும் துணை முதல்வர் பிரபாகரன் நன்றி கூறினார்.

0 comments: