Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
திருப்பூர் பல்லடம் ரோடு பகுதியில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறிய தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் காவலாளியாக ராமசாமி(வயது 65) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அந்த மருத்துவமனையின் பின் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி சித்ராவுடன் (55) தங்கியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராமசாமி, நேற்று காலை வீட்டில் தனக்கு தானே தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை காப்பாற்றி, அவர் வேலை செய்யும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், இவருக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி கூறியதாக தெரிகிறது.
இதனால் அவருடைய உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைக்க 108 எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, மறுமுனையில் இருந்தவர்கள், தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சை அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை சமரசப்படுத்தி, ராமசாமியை சரக்கு ஆட்டோவின் பின்புறம் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே ராமசாமியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, தாராபுரம் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி வளாகம் அருகே டீக்கடை முன் மூன்று 108 ஆம்புலன்சுகள் டிரைவர் இன்றி நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ராமசாமியின் உறவினர்களும், பொதுமக்களும் மனிதநேயம் எங்கே சென்றது என்று வேதனை அடைந்தனர்.

0 comments: