Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு ஆட்டோ தொழிற்சங்க சம்மேளன குழு உறுப்பினர் அன்பு தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், பொன்னுசாமி, லாரன்ஸ்(சி.ஐ.டி.யு.), சேகர்(ஏ.ஐ.டி.யு.சி.), முகமது யூனுஸ், கனகராஜ்(பொதுச்சங்கம்), மற்றும் தே.மு.தி.க., பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., ம.ம.க. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
திருப்பூரில் வருகிற 1–ந் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் நிர்ணயம் வசூல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் திருப்பூர் மாநகரில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு கட்டுபடி ஆகாது. எனவே மீட்டர் கட்டணத்தை அதிகரித்து நிர்ணயம் வேண்டும்.
மேலும் மீட்டர் கிடைப்பதில் தாமதம், மெக்கானிக் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீட்டர் பொருத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2–ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேலைநிறுத்தம் செய்வது. அன்று காலை 10 மணிக்கு குமரன் சிலைமுன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

0 comments: