Wednesday, November 26, 2014

On Wednesday, November 26, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த 40 இளைஞர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் நவீன கருவி மூலம் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுவடை செய்வது பற்றியும், பதநீர் இறக்கி, அதன்மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் தென்னையில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி தாக்குதல், நோய்கள் பராமரிப்பு மற்றும் களைச்செடிகள் பராமரிப்பு பற்றிய அனைத்து தொழில்நுட்பங்கள் பற்றியும், இவர்களுக்குத் தேவையான முதலுதவி, சிறுசேமிப்பு, தகவல் பரிமாற்றம், மது அருந்துவதால் ஏற்படும், தீமைகள், அதிலிருந்து மீள்வது பற்றிய கருத்துக்களும் வழங்கப்பட்டது.

இறுதி நாள் விழாவிற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர். சி.சண்முகவேலு தலைமை தாங்கினார். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு ரூ.3500 மதிப்புள்ள நவீன கருவி, ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டையும் வழங்கினார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் பெரியநாயகம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜெயமணி ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்க செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.

0 comments: