Tuesday, January 20, 2015

On Tuesday, January 20, 2015 by farook press in ,    
திருப்பூர் அடுத்துள்ள கேத்தனூரில் ரூ.1.03 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட அம்மா நகர் பெரிய மாநகராக உருவாகும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆஅன்ந்தன் கூறினார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழி காட்டுதலின் பேரில்,திருப்பூர் அடுத்துள்ள கேத்தனூர் அம்மா நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ் எம்.பி.,எம்.எல்.ஏ.,ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் உள்ள கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில் நடைபெற்ற பொங்கல் விழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ.,பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்-கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் அனைவரையும் வரவேற்றார்.அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி  வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கேத்தனூர் ஊராட்சியில் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, பட்டாக்களை வழங்கி வீடுகளை உருவாக்கி இப்பகுதியில் பொங்கல் விழா நடக்கிறது.இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சி பொறுபேற்ற போது முதல் அனைத்து அனைத்து ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ  விலையில்லா அரிசி வழங்கி வருகிறார், அதே போல மக்களின் குடியிருப்பு சிக்கல்களை தீர்க்க வருடத்துக்கு 2 லட்சம் பட்டாக்களை வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நிலத்தை வகை மாற்றம் செய்து 51 பேருக்கு பட்டா வழங்கி, ரூ.1.03 கோடி மதிப்பில் வீடு கட்டவும், அடிப்படை வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில், தமிழகத்தில் ஏழை எளீய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்லது. அது போல உடுக்க உடை வேண்டும், என்பதற்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றையும் தந்து உள்ளார்.அனைத்து மக்களும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழக மக்களுக்கு பொங்கல் கொண்டாட வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளார். கேத்தனூரில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நகர் மேம்படவும் தொடர்ந்து பொங்கல் விழா நடத்தவும், மிகப்பெரிய மாநகராக அம்மா நகர் உருவாகவும் வேண்டும்..இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த விழாவில் பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சிவாசலம், விவசாய அணி பிரிவு செயலாளர் புத்தரச்சல் பாபு, உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், பலல்டம் நகர துணைத்தலைவர் வைஸ் பழனிசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: