Monday, March 16, 2015

On Monday, March 16, 2015 by farook press in ,    
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு மற்றும் கிழக்கு கிளைகள் சார்பில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தெற்கு கிளை சார்பில் குமரானந்தபுரம் கிளை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஈ.லெனின் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கே.கணேசன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம், மாநகர துணைச் செயலாளர் சே.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பகுதியில் 800 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அதேபோல் கிழக்கு கிளை சார்பில் பிச்சம்பாளையம் முக்கிய சாலையில் கிருஷ்ணா ஸ்டோர் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெ.மணிமாறன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். இங்கும் 800 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

0 comments: