Thursday, April 02, 2015

On Thursday, April 02, 2015 by Unknown in ,    
மதுரை ரெயில் நிலையத்தில் அனைத்து பிளாட்பாரங்களிலும் எஸ்கலேட்டர் அமைக்க பயணிகள் கோரிக்கை
தென் தமிழகத்தில் பெரிய ரெயில் நிலையமாக இருப்பது மதுரை ரெயில் நிலையம். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் மதுரை சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும், யாத்திரிகர்களும் தினசரி ரெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் பல்வேறு ஊர்களுக்கு மதுரையில் இருந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை பயணிகளின் நீண்டநாள் கனவான எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் உள்ள 6 பிளாட் பாரங்களில் 2, 3 மற்றும் 6–வது பிளாட் பாரங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் முதலாவது பிளாட்பாரம் மற்றும் 4–வது 5–வது பிளாட் பாரங்களில் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. 4–வது மற்றும் 5–வது பிளாட்பாரத்திலிருந்தான் ராமேசுவரத்திற்கு செல்லும் ரெயில்களும், ராமேசுவரத்திலிருந்து வரும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரத்திற்கு செல்வோரில் முதியோர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிக அதிக அளவில் உள்ளனர். மேலும் செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் பெரும்பான்மையான நேரங்களில் பிளாட்பாரம் 4 மற்றும் 5 லிருந்து தான் இயக்கப்படுகிறது.
எனவே 4 மற்றும் 5–வது பிளாட்பாரத்தில் உடனடியாக எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து இறங்கி 2 மற்றும் 3–வது பிளாட்பாரம், 4 மற்றும் 5–வது பிளாட் பாரம் மற்றும் 6–வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் ரெயிலில் மாறி பயணம் செய்ய செல்வோர் முதலாவது பிளாட்பாரத்தில் எஸ்கலேட்டர் வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
ஆகவே முதலாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ஏறி செல்வதற்கு மட்டுமாவது உடனடியாக எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: