Thursday, April 02, 2015

On Thursday, April 02, 2015 by Unknown in ,    
Image result for கல்யாணி மதிவாணன்
நெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் உதவித் தொகையுடன் பிஎச்டி ஆராய்ச்சியை (Non-NET Phd Fellowship) மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10 கோடியை பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கியுள்ளது என்று துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.
 பல்கலை.யின் மு.வ. அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியது:
 ஆற்றல்சார் பல்கலை. அந்தஸ்து பெற்றுள்ள மதுரை காமராஜர் பல்கலை.க்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், யுஜிசி ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களும் உதவித் தொகையுடன் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலை.யில் கூடுதலாக 100 மாணவர்கள் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
 மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மதுரை காமராஜர் பல்கலை. விண்ணப்பித்துள்ளது. அதில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 உயர்கல்வி நிறுவனங்களில் மதுரை காமராஜர் பல்கலை.யும் இடம் பெற்றுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை. உறுப்புக் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, தமிழக அரசு ரூ.2.41 கோடி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிக்கான முதல் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பல்கலை.யின் உறுப்புக் கல்லூரிக்கான நிரந்தரக் கட்டடம் கட்ட அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையிடம் இருந்து இதற்கான நிலம் இலவசமாகப் பெறப்படும் என்றார்.
 வரும் நிதியாண்டுக்கான (2015-16) பட்ஜெட் அறிக்கை செனட் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்தில் காணொலி காட்சி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், ரூ.15 லட்சத்தில் மொழி ஆய்வகங்கள்,  ரூ.20 லட்சத்தில் தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 பல்கலைக்கழக பதிவாளர் என்.ராஜசேகர், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

0 comments: