Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    
திருப்பூரில் வீடு, வீடாக வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வந்து, வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
 இதில், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த ஆவணங்களை, வீட்டுக்கு வரும் நிலை அலுவலர்களிடம் கொடுத்து, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்ற பணிகளுக்கும், அந்தந்தப் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்

0 comments: