Thursday, July 16, 2015
On Thursday, July 16, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.07.2015 சபரிநாதன் 9443086297
உய்யக்கொண்டான் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிääஅவர்கள் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் திட மற்றும் திரவக்கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிää அவர்கள் இன்று (16.07.2015) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உய்யகொண்டான் வாய்க்காலானது பெட்டவாய்த்தலையிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக சுமார் 71கி.மீ. நீளத்திற்கு செல்கிறது. இவ்வாய்க்கால் புத்தூர் ஆறுகண்;ää திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளின் வழியாக கடந்து வாழவந்தான்கோட்டை கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றடைகிறது. பின்ää உய்யக்கொண்டான் வாய்க்காலனது நீட்டிப்பு வாய்க்காலாக தஞ்சாவூர் மாவட்டம்ää பூதலூர் வட்டம்ää சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது. இப்பாசன வாய்க்கால் மூலம் 32ää742 நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இவ்வாய்க்கால் புத்தூர் ஆறுகண் தொட்டிப்பாலத்திலிருந்து மாநகராட்சி மையப்பகுதியில் 6 கி.மீ. வரை செல்கிறது. இப்பகுதியில் கரையோர குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கழிவுநீரும்ää குப்பைகள் மற்றும் கழிவுகள் வாய்க்காலில் கொட்டப்படுவதால் பாசன நீர் தேக்கம் ஏற்பட்டுää மண் மேடிட்டும்ää ஆகாயத்தாமரை செடிகள் அடர்த்தியாகவும்ää அபிரிமிதமாகவும் வளர்ந்து சுகாதாரமற்;ற நிலை ஏற்படுகிறது.
உய்யக்கொண்டான் ஆறு மாசுபடுவதை தடுக்கவும் அதனை பாதுகாக்கவும் மாநகராட்சிஇ பொதுப்பணித்துறை (ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம்)இ மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இ வருவாய்த்துறைஇ சுகாதாரத்துறை மற்றும் சுற்றுச் சூழல்த்துறை தன்னார்வக் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு இக்குழுவினர்களால் ஒவ்வொரு வாரமும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இன்று (16.07.2015) ஆறுகண் பாலத்திலிருந்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ள அண்டகொண்டான் நடைபாலம் வரையும் தொடர்ந்து பணி மேற்கொள்ளப்பட உள்ள பாலக்கரை ரயில்வே பாலத்திலிருந்து பெரியார் பாலம் வரை 1 கி.மீ. தூரத்திற்கு பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலில் 6 கி.மீ தூரத்திற்கு ரூ.1.96 கோடி மதிப்பில் தூர்வாரி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாலக்கரையிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்கு ரூ.9.4 கோடி மதிப்பில் வாய்க்காலின் இருபுறமும் சுற்றுச்சுவர் மற்றும் தரைதள பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அண்ணாநகர் இணைப்பு மேம்பாலம் முதல் எம்.ஜி.ஆர்.சிலை வரை 630 மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சி மூலம் ரூ. 85 இலட்சம் செலவில் நடைபாதைää தடுப்பு வேலிää மிதிவண்டி செல்வதற்கான பாதைää பொதுமக்கள் அமர்வதற்கான பலகை மற்றும் மரக்கன்றுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வாய்க்காலில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவதை தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் 266 வீடுகளிலிருந்து கழிவுகள் நேரடியாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலப்பது கண்டறியப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 71 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர். 29 வீடுகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 166 வீடுகளுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி மூலம் முதல்கட்டமாக அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாண்டியராஜன் நகரப் பொறியாளர் நாகேஷ் செயற்பொறியளர் அமுதவல்லிää உதவி செயற்பொறியாளர் லெட்சுமணமூர்த்தி உதவி செயற்பொறியாளர் (ஆற்றுப்பாதுகாப்பு) கண்ணன் உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சேகரன்ää நீலமேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
0 comments:
Post a Comment