Saturday, July 11, 2015

On Saturday, July 11, 2015 by Tamilnewstv in    

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்               பழனிசாமி; தொடங்கி வைத்தார். 
     மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயத்தை பொதுமக்களிடையே உணர வைக்கவும்ää விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் ஆண்டுதோறும் ஜுலை 11ம் தேதி அன்று உலக மக்கள் தொகை தினமாக கடைபிடித்திட உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.  அதன்படிää திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .பழனிசாமிääஇன்று (11.07.2015) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
     மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பாதிக்கக் கூடிய எதிர்கால வாழ்வின் வளம்பற்றி மக்களிடையே எடுத்துக் கூறுவதற்காகவும்ää மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தத் தேவையான குடும்ப நல முறைகளை மக்கள் பின்பற்றி தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்வது இத்தினத்தின் நோக்கமாகும்.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பினை தொடர்ந்து 26வது ஆண்டாக இந்த ஆண்டு உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
     தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 148 மனிதர்கள் வாழ்ந்தனர்.  இன்று அதே நிலப்பரப்பில் 555 மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  பெருகிவரும் மக்கள் தொகையால் அடுத்த 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
     உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயத்தை பொதுமக்களுக்கு உணரவைத்திடும் வகையில் இப்பேரணி நடத்தப்படுகிறது.  வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இப்பேரணி மத்திய பேருந்து நிலையம்ää சங்கீதா உணவகம் வழியாக மருத்துவக்கல்லூரியைச் சென்றடைந்தது.  இப்பேரணியில் .வெ.ராää சேவாசங்கம்ää ஜி.வி.என்.நர்சிங்ää தேசிய கல்லூரிää பி~ப் ஹீபர்ää கி..பெ. மற்றும் மெத்தடிஸ் ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவää மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வசகங்களை எழுப்பி சென்றனர்.
     முன்னதாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இப்பேரணியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்)                 டாக்டர் பிரானே துணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர் சாவித்ரி மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் பிரான்சிஸ் கா பிருந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: