Sunday, January 10, 2016

On Sunday, January 10, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் ஜேசுராசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்றும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சுரஞ்சினின் கழுத்தை ஜேசுராஜ் நெரித்துள்ளார். இதில் சுரஞ்சினி மயங்கி கீழே விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்து ஜேசுராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மயக்கம் தெளிந்து எழுந்த சுரஞ்சினி முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஜேசுராஜை தேடி வருகின்றனர்.

0 comments: