Monday, October 24, 2016

On Monday, October 24, 2016 by Unknown in    

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வடக்கு வட்டத்திற்குட்பட்ட நிரந்தர பட்டாசு கடைகளை திருப்பூர் ஆர்.டி.ஓ.முருகேசன் தலைமையில் வடக்கு தாசில்தார் முருகதாஸ், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், நிலவருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்தசாமி, அண்ணாதுரை ஆகியோர் கொண்ட குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளில் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்களுடன் கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். விதிகளை மீறினாலோ, உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

0 comments: