Monday, October 24, 2016

On Monday, October 24, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.நகராட்சி வாரசந்தை

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் வாரச்சந்தை புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.மழை காலமாதலால் ஓடையை தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, இணைப்பு சாலையை அமைக்கவும், உடுமலையில் அம்மா திருமண மண்டபம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நேற்று பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆலோசனை

இந்த பணிகள் உள்பட நகராட்சிப்பகுதியின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் (சென்னை) உடுமலை நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

0 comments: