Monday, October 24, 2016

On Monday, October 24, 2016 by Unknown in    

தளி,

அமராவதி ஆற்றுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த 2 முதலைகள் சிக்கின. அவற்றை வனத்துறையினர் மீட்டு முதலைப்பண்ணையில் கொண்டு ஒப்படைத்தனர்ஆற்றில் முதலைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து சற்று தொலைவில் உடுமலை-கல்லாபுரம் சாலையில் வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள முதலைகளுக்கு மாட்டு இறைச்சியும், மீனும் உணவாக வழங்கப்படுகிறது. இங்குள்ள தொட்டிகளின் மேல் பகுதி மூடப்படாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பறவைகள் முதலைகுட்டிகளை உணவிற்காக எடுத்து செல்லும் நிலை உள்ளது.

அப்போது பறவைகளிடம் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைக்கும் முதலைகுட்டிகள் அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் வசிக்கின்றன. அப்படி விழும் முதலைகள் புதர்களில் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கணியூர், கடத்தூர், கல்லாபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அமராவதி ஆற்றில் உள்ள முதலைகளை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.ஊருக்குள் புகுந்தன

இந்த நிலையில் கல்லாபுரம் அண்ணாநகர் அருகே வயல்வெளி பகுதியில் ஒரு முதலை சுற்றித்திரிவதாகவும், மற்றொரு முதலை கல்லாபுரம்- கொழுமம் சாலை அருகே உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் உள்ளதாகவும் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த 2 முதலைகளையும் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 2 முதலைகளையும் முதலைப்பண்ணையில் கொண்டு வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவை அங்கு பரா மரிக்கப்பட்டு வருகின்றன

0 comments: