Friday, April 17, 2020

On Friday, April 17, 2020 by Tamilnewstv in    

முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட்டியம் பகுதிகளில் 144 தடை உத்தரவு காரணமாக சிரமப்பட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்.

  முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுர்pயும் தூய்மைபணியாளர்கள், திருநங்கைகள், சுயஉதவி குழுவினர்கள் உள்ளிட்ட 95 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பேரூராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

0 comments: