Tuesday, January 19, 2016

On Tuesday, January 19, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொமுச சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் கடன், பயண முன்பணம் உள்ளிட்டவைகளை துரிதமாக வழங்க வேண்டும். விருப்ப மாறுதல் பதவி உயர்வு போன்ற கோரிக்கைளை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்களை வலியுறுத்தி திமுகவின் தொழிற்சங்கமான மின்திட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடியில் நாளை (20ம் தேதி) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகிக்கிறார். தொழிலாளர் அணிச் பொதுச் செயலளார் சிங்கார ரத்தினசாமி கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் திமுக, தொமுச நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக மாவட்ட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments: