Tuesday, January 19, 2016

On Tuesday, January 19, 2016 by Unknown in , ,    
வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்தவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பதவிக்கு இன சுழற்சி அடிப்படையில் Marine Engine Fitter தொழிற்பிரிவிற்கு தாழ்த்தப்பட்டஅருந்ததியர்; பொது பிரிவு முன்னுரிமையுள்ளவர்களிடமிருந்து SC-A GL-P மற்றும் Fashion Design Technology  தொழிற் பிரிவிற்கு பொதுப் பிரிவினர்-முன்னுரிமை அற்றவர்களிடமிருந்தும் (GT-GL – NP),நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சம்பள ஏற்ற முறை 5200 – 20200GP. 1900. வயது வரம்பானது 01.07.2015 அன்று SC மற்றும் ST பிரிவினருக்கு 18 முதல் 35 வயதுவரையும், MBC மற்றும் BC பிரிவினருக்கு18 முதல் 32வயதுவரையும், இதரபிரிவினருக்கு18 முதல் 30வயது வரையும் இருக்கவேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவில் NTC / NAC படித்து முடித்திருக்க வேண்டும். NTC / NAC இல்லாமல் கூடுதல் கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 

விண்ணப்பிக்கும் முறைகீழ்காணும் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் உரிய நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 1) பெயர் 2) கல்வித்தகுதி 3) தொழில்நுட்ப கல்வி 4) சாதி 5) முன் அனுபவவிபரம் 6) முன்னுரிமை ஏதுமிருப்பின் அதன் விவரம்7) வீட்டு முகவரி மற்றும் கைபேசி எண். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:25.012016 மாலை 5.00 மணிவரை. 

விண்ணப்பம் அனுப்பவேண்டியமுகவரி:  முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி– 628 101 தொலைபேசிஎண். 0461-2340133. தேர்வுசெய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகதேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்.

0 comments: