Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 16

 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்



கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் தனியார் அமைப்பினரும் உணவு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக திருச்சியில்  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும்  ஸ்ரீரங்கம் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள அம்மா மண்டப சாலையில், மற்றும் 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

அம்மா உணவகத்தில்  உள்ள சமையல் கூடம் மற்றும் பொதுமக்கள் அருந்தும் குடிநீர் ஆகியவை ஆய்வு செய்து அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அவர் சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிறந்த முறையில் உரிய நேரத்தில்  தரமான உணவுகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
 அமைச்சர் ஆய்வு செய்த போது‌ ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்டு திருப்பதி பணயபுரம் கர்ணன் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


0 comments: