Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
குளத்தில் நீரிழ் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு.
கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக உள்ள ராமுபிரியா, லெட்சுமி பிரியா என்ற 9 வயது நிரம்பிய இரண்டு மகள்களும் இரட்டைப் பிறவிகள். வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள்  இன்று அதே பகுதியில் உள்ள கும்மடிக்குளத்தில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற நிலையில் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

0 comments: