Wednesday, February 24, 2016

On Wednesday, February 24, 2016 by Tamilnewstv   
திருச்சி 24.2.16 
திருச்சி புறநகர் மாவட்டம் அஇஅதிமுகசார்பிலும் மற்றும் அண்ணா தொழிற் சங்கம் சார்பிலும் முதல்வர் 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் ரெத்தினவேல் தலைமையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயில் சிறப்புப்புஜை அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது மேலும் 688 பயனாளிகளுக்கு வேஷ்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் மக்களின் முதல்வர் நீண்ட நாள் வாழ சேவல் கோழி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு; அருணகிரி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகராஜ் சிவாஜி பார்வதி சரோஜா ஆகியோர் சேவல் கோழி தானம் கொடுத்தனர் பின்னர் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அண்ணா தொழிற்சங்க கொடி யேற்றி இணிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.   
திருச்சி புறநகர் மாவட்டம் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: