Wednesday, June 29, 2016

On Wednesday, June 29, 2016 by Tamilnewstv in    


திருச்சி 29.6.16                  சபரிநாதன் 9443086297

திருச்சி வழக்கறிஞர்கள் ரயில் மறியல் ஜீலை 1 ஆம் தேதி முதல் நீதிமன்ற உள்ளிறுப்பு போராட்;டம் என வழக்கறிஞர் ரஜேந்திரபிரசாத் பேட்டி
அவர்கூறியது.....சென்னை உயர்நீதி மன்றம் வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)ல் பல்வேறு திருத்தங்களை அறிவித்துள்ளது அதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட உயர்நீதி மன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம் வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாவோ நிரந்தரமாகவோ தடைசெய்யலாம். வுழக்கறிஞர் தவறு செய்தால் நீதிபதிகள் தண்டிப்பது சரிதானே என்று பலருக்கு தோனலாம் ஆனால் அது சரியல்ல வழக்கறிஞர்கள் பொறியாளர்கள் பட்டயங்கணக்கர்கள் போன்ற பதிவு பெற்று தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களால் ஓட்டுப்போட்டுத்தேர்ந்தெடுக்கப்பட்ட குழுமங்ளுக்கு மட்டுமே உண்டு. நீதிமன்ற விதிமுறைகளை மீறுகிறவர்கள் மீது நீதிமன்ற அவமிதிப்பு வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மட்டுமே நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது.
சட்டப்படியான இந்த நடைமுறையைத்தான் சென்னை உயர்நீதி மன்றம் இப்போது மாற்றியமைத்துள்ளது.இதன் மூலம் வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகளாக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப்பறிக்கிறது. இந்த சட்டத்திருத்தம் தமிழ்நாட்டைத்தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.
சட்டத்திருத்தை உடனடியாக வாயஸ் பெறவேண்டும் என்று 2 வாரங்களாக தமிழக வழக்கறிஞர்கள் ஒட்டு மொத்தமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும்இந்த ரயில்மறியல்போராட்டம் அதன்தொடர்ச்சியாக திருச்சி நீதிமன்றத்தில் பணிபுரியும் 1000 மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலிருந்து தலைமை தபால் நிலையம் வழியாக நடந்து ரயில் நிலையம் வந்து  ஜனசதாப்தி ரயிலை மறித்தனர் மக்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பாடமல் இருக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தியிருந்தனர்.
பேட்டி ரஜேந்திரபிரசாத்(வழக்கறிஞர்)

0 comments: