Friday, July 01, 2016

On Friday, July 01, 2016 by Tamilnewstv   
 
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக மாபெரும் உலகப்பணத்தாள்கள் நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் கண்காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேஸ்வரி அரங்கில் நடைபெற்றது. 
இதில் தமிழகம் அல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பார்வைக்கு பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள், விலைமதிப்பு மிக்க கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
கண்காட்சியில் வரலாற்று மரபுபடி புவியியல் அடிப்படையில் ஆசிய கண்டத்திலுள்ள 50 நாடுகளின் ரூபாய் நோட்டுக்கள் நாணயங்கள் இடம்  பெற்றிருந்தன. 
தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளின் பல்வேறு பணத்தாள்களும் நாணயங்களும் காட்சியில் பிரமிப்பை ஏற்படுத்தின. விழாவில் தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களும் தங்கள் சேகரிப்பை முகம் சுழிக்காமல் பள்ளி மாணவர்களுக்கு காட்டியதோடு விளக்கம் அளித்தும் குழந்தைகளை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். 
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய ரூபாயில் தற்போது பயன்பாட்டில் உள்ள குறியீடை வடிவமைத்த உதயகுமார், தென்னிந்திய செயலாளர் ரோலன்ட்ஸ் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இக்கண்காட்சியில் இந்திய தபால்துறையின் சார்பாகவும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது முதல் நாளான இன்றே பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்களுடன் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச்சென்றனர். 
ஜூலை 1,2,3 ஆகிய தேதிகள் நடைபெறும் இக்கண்காட்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் குழந்தைகளுக்கு நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருச்சி பணத்தாள் சேகரிப்போர் சங்கத்தலைவர் விஜயகுமார் கேட்டுக்கொண்டார்.

0 comments: