Saturday, July 09, 2016

On Saturday, July 09, 2016 by Tamilnewstv in    
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் 
அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதிமுகபொதுச்செயலாளரும்  தமிழகத்தின் முதலமைச்சருமான  ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர் கூட்டம் மார்க்கெட் பாலக்கரை மீனாட்சி மண்டபத்தில் நடைபெற்றது 

திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் குமார் பேசுகையில் திருச்சிக்கு மட்டும் 3000கோடி மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றிக்கொடுத்தவர் நம்முடைய முதல்வர் அம்மா நாம் எப்படி யுக்திகொண்டு வரும் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க என்ன செய்யவேண்டு;ம் என்பதை நாம் யோசித்து திட்டங்களை வைத்து நாம் ஜெயிக்கவேண்டு;மென்றார்


கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்   குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்   மனோகரன் ஸ்ரீரங்க  சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வளர்மதி   கிழக்கு சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி   ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: