Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
sathuranga_001நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை.
இப்படத்தின் டிரைலரை இளையதளபதி விஜய் அவர்கள் வெளியிட்டார்.
இங்க பணம் இருந்தா ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம், பிடிக்காதவனை அடிக்கலாம் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம்னா நான் ஏன் பணம் சம்பாதிக்க என்ன வேண்ணா பண்ணக் கூடாது என்று நினைக்கிற ஒரு இளைஞனின் கதையே இப்படம்.
“இந்த வெள்ளை சட்டை போட்டாலே அடுத்தவன ஏமாத்த தனி தைரியம் வந்துருதுல” என அரசியல்வாதிகளின் நெற்றியில் அடித்தார் போல் வசனங்களுடன் முடிவு அடைகிறது ட்ரைலர். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்.
அதிலும் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்னது விஜய் தாக்கப்பட்டாரா’ டீசர் எல்லோர் கவனைத்தையும் எளிதில் ஈர்த்துள்ளது.
மேலும் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான நட்ராஜ் கிராமத்து கதையில் இருந்து விலகி வித்தியாசமாக நடித்துள்ளார். கண்டிப்பாக நம்மில் தோன்றும் பல சந்தேகங்களுக்கு, படம் பார்த்து முடித்த பின் நல்ல விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் பல சுவாரசியங்கள் உள்ளடக்கிய இப்படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாகிறது.

0 comments: