Saturday, August 27, 2016

On Saturday, August 27, 2016 by Tamilnewstv in
திருச்சி 27.8.16                 சபரிநாதன் 9443086297
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் (மு.செ. பிரிவு) இணையும் விழாநிகழ்ச்சி நடைபெற்றது
அதில் பேட்டியளித்து பேசிய சிறப்புத்தலைவர் (டிஎன்ஜிஇயு) பாலசுப்பிரமணியம் கூறுகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் (மு.செ. பிரிவு) இணைப்பது எனவும் மூன்று சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் என்னும் பெயரில் செயல்படுவது எனவும் அச்சங்கத்தின் கொடி மற்றும் லச்சணையை பயன்படுத்துவது தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தில் உள்ள 17 தோழர்களும் இணையும் தமிழ்நாடு அரசுஊழியர் ஐக்கிய சங்கத்தின் சார்பில் 17 தோழர்களும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் (மு.செ. பிரிவு)சார்பில் 13 தோழர்களும் ஆக மொத்தம் 47 தோழர்கள் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் 2.10.16 வரை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் 3ன்படி மாவட்ட அமைப்புகள் ஒருங்கிணைப்பு நிறைவு செய்த பின்னர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் 9 தோழர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம் 9 தோழர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் (மு.செ. பிரிவு) 5தோழர்களும் ஆக மொத்தம் 23 தோழர்களை கொண்ட மாநில நிர்வாகிகளை 2.10.16 மாநில பொதுக்குழு கூட்டி தேர்வு செய்வது எனவும் தீர்;மானிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் 2.10.16 ல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும வேலை நிறுத்த போரட்ட ஆர்பாட்டம் நடத்துவது எனவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில மையத்திலிருந்து ஒருவரை அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சிவக்குமார் பொன்னி வளவன் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.