Thursday, September 22, 2016

On Thursday, September 22, 2016 by Unknown in    

திருப்பூர்: திருப்பூரில் இயங்கும் சாய, சலவை ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.

அனுமதிபெறாமல் இயங்குவது, சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் நிறுவனங்களை கண்டறிந்து, "சீல்' வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

பறக்கும்படை பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான மாசுகட்டுப் பாடு வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம், தொடர் ஆய்வு நடத்தினர். லட்சுமி நகர் பகுதியில், வாடகை கட்டடத்தில், அடுத்தடுத்து இரண்டு, பட்டன், ஜிப்களுக்கு சாயமேற்றும் நிறுவனங்கள் இயங்கின; அனுமதி பொறாமல் இயங்கிய இந்நிறுவனங்கள், பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தி, பட்டன், ஜிப், லேஸ் ஆகியவற்றுக்கு சாயமேற்றி, கழிவுநீரை அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டது தெரியவந்தது. இந்த நிறுவனங்களுக்கும், அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.

தொட்டிய மண்ணரையில் வேலுசாமி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், 50 கிலோ கொள்ளளவு உள்ள "விஞ்ச்' மெஷின் வைத்து, "சேம்பிள் டையிங்' இயக்கியதால், இந்த நிறுவனத்துக்கும் "சீல்'வைக்கப்பட்டது.

0 comments: