Thursday, September 22, 2016

On Thursday, September 22, 2016 by Unknown in    

திருப்பூர்: தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தெரு நாய்கள் கடித்து இறந்தது. உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு மான் சுற்றி வருகிறது.

அவிநாசி அருகே கோதபாளையம், வண்ணாற்றங்கரை ஓடை ஆகிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் வசிக்கின்றன. பருவ மழை பொய்த்ததால், குளம், ஓடை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. உணவு, நீர் தேவைக்காக, அங்குள்ள புள்ளி மான்கள் வழி தவறி வெளியே வருகின்றன.

மூன்று நாட்களுக்கு முன், கோதபாளையம் வஞ்சிபாளையம் ரோட்டில், ஒன்றரை வயதுடைய பெண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. வண்ணாற்றங்கரை ஓடை வழியாக வந்த, ஒன்றரை வயது பெண் மான், வழி தவறி, நேற்று முன்தினம் இரவு திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம், சொர்ணபுரி ரிச் லேன்ட் பகுதிக்குள் வந்துள்ளது.

அங்கிருந்த தெரு நாய்கள் மானை துரத்தி, கடித்து குதறியுள்ளன. பரிதாபமாக இறந்த மானை, வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, ஓடை பகுதியில் புதைத்தனர்.

அதேபோல், வஞ்சிபாளையம் பகுதியில், ஒன்றரை வயது ஆண் மான் ஒன்று, நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடிய நிலையில் சுற்றி வருகிறது.

எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, போர்வெல் அமைத்து, அங்குள்ள தொட்டிகளில் நீர் விட்டால், மான்கள் வெளியேறுவது தடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையை, வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


0 comments: