Thursday, September 22, 2016

On Thursday, September 22, 2016 by Unknown in    


திருப்பூர்: திருப்பூரில், ஏலச்சீட்டு நடத்தி, லட்சக்கணக்கில் பணம் தராமல் தலைமறைவானவர் குறித்து, "டிபாசிட்'தாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர், மாநகர போலீஸ் கமிஷனரகத்தில், மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனரிடம், நேற்று புகார் ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியுள்ளதாவது:

கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகரில், கணேஷ்ராம் என்பவர், ஸ்ரீபாலாஜி சிட் பண்ட்ஸ் என்ற சீட்டு நிறுவனம் நடத்தினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரிடம், திருப்பூரை சேர்ந்த பலரும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, பல குரூப்புகளில் ஏலச் சீட்டு சேர்ந்து, பணம் செலுத்தினோம்.

சீட்டு முதிர்வடைந்த பின்னும், தொகையை தரவில்லை. திடீரென, அவர் வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது சொந்த ஊரிலும் இல்லை. அவரது மனைவி, பதில் அளிக்காமல் எங்களை விரட்டினார். நாங்கள், 12 பேர் 20 லட்சம் ரூபாயை, பறிகொடுத்துள்ளோம். தலைமறைவாக உள்ள கணேஷ்ராமை கண்டு பிடித்து, பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: