Thursday, September 22, 2016

உடுமலைஉடுமலையில் நகராட்சி சுகாதார வளாகத்தை அதிகாரிகள் பூட்டியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புகார்கள்
உடுமலை நகராட்சி 11–வது வார்டுக்கு உட்பட்ட பை–பாஸ் ரோட்டில் உடுமலை நகராட்சி ஒருங்கிணைந்த சுகாதார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிப்பிடம் மற்றும் குளியலறை உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை நகராட்சியின் அனுமதி பெற்று மகளிர் சுய உதவிக்குழு பராமரித்து வருகிறது.நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொது கழிப்பிடத்தை பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கழிப்பிடம், குளியலறை ஆகியவற்றை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொது மக்களிடம் இருந்து நகராட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.சாலை மறியல்
இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் சுகாதார வளாகத்திற்கு வந்தனர். சுகாதார வளாகத்தை பராமரிப்பு மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அனுமதியளித்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, சுகாதார வளாகத்தை நேற்றுகாலை 10 மணி முதல் நகராட்சி திருப்பி எடுத்துக்கொள்கிறது என்ற அறிவிப்பை சுகாதார வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் ஒட்டினர். பின்னர் சுகாதார வளாகத்தின் கதவை பூட்டினர். இந்த தகவல் கிடைத்ததும் ஆவேசம் அடைந்த இந்த வார்டுக்கு உட்பட்ட பழனி சாலை அருகில் வசிக்கும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.அவர்கள் சுகாதார வளாகத்தின் முன் பை–பாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் நகராட்சி நகர்நல அதிகாரி அருண், நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எங்களுக்கு கழிப்பிட வசதி தேவை. அதனால் சுகாதார வளாகத்தை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர்கள் 4 பேர் அங்கிருந்தனர். சாலை மறியலால் பை–பாஸ் ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.போக்குவரத்து பாதிப்பு
இதன் பின்னர் நகராட்சி அதிகாரிகள் சுகாதார வளாக பூட்டை திறந்து விட்டனர். இதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு விட்டு பொதுமக்கள் சுகாதார வளாக பகுதிக்கு சென்றனர். பின்னர் சுகாதார வளாகத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சுய உதவிக்குழு பெண்களிடம் நகராட்சி அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் பகுதியை சேர்ந்தவர்களிடம் வசூலிப்பதில்லை என்றும், வெளியாட்கள் வந்தால் மட்டுமே அவர்களிடம் சுகாதார வளாகத்தை பராமரிப்பதற்காக கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் சுகாதார வளாகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment