Thursday, September 22, 2016

On Thursday, September 22, 2016 by Unknown in    

தாராபுரம்தாராபுரம் பஸ் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது பெண் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.1½ வயது பெண் குழந்தை

தாராபுரம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சுமார் 1½ வயதுள்ள பெண் குழந்தை ஒன்று நடைபாதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த குழந்தை, சற்று நேரத்திற்கு பிறகு கண்விழித்ததும் ‘‘அம்மா... அம்மா’’ என்று அழுது கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது.ஆதரவற்ற நிலையில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை பஸ் நிலையத்தில் இருந்த கடைக்காரர்கள் தூக்கி வைத்துகொண்டனர். பிறகு குழந்தையின் பெற்றோர் அருகே எங்காவது இருக்கிறார்களா? என்று தேடி பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தையைத்தேடி யாரும் வராததால், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் நேற்றுகாலை பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு, குழந்தை பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியைச்சேர்ந்த பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து குழந்தையை பார்த்துச்சென்றனர். யாருக்கும் குழந்தை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.குழந்தை அழகாக இருந்ததால் ஒரு சிலர் வளர்க்க தங்களிடம் குழந்தையை கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டனர். குழந்தையை தரமறுத்த போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு லைன் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்தனர்.குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

அதனைத்தொடர்ந்து சைல்டு லைன் ஊழியர் வளர்மதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ராஜசேகர் ஆகியோர் தாராபுரம் வந்தனர். போலீசார் முறைப்படி குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நலக்குழுவிடம் (கோர்ட்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் பஸ் நிலையத்தில் 1½ வயது பெண் குழந்தையை பெற்றோர் விட்டுச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

0 comments: