Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

திருப்பூர்பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றுமாலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள பி.எஸ்.என்.எல்.மெயின் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார்.பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளை தலைவர் குமாரவேல், செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு தொலை தொடர்பு தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் விஸ்வநாதன், கிளை செயலாளர் ரமேஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: