Sunday, October 09, 2016

On Sunday, October 09, 2016 by Tamilnewstv in    
திருச்சி 9.10.16
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பாஜகாவிற்கு எச்சரிக்கை தனியார் சட்;டத்திற்குள் தலையிடவேண்டாம்
திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டம் வரகனேரி தவ்ஹித் மர்க்கஸில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் அல்தாஃபி கூறுகையில் சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் உச்ச நீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? ஏன்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது
உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப்போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது
முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது பெண்களின் சயமரியாதையைப்பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் இஸ்லாமியப்பெண்களின் நலனில் பாஜகவிற்கு ஏன்    அக்கரை தலாக் நடைபெறும் மதசார்ப்பற்ற இந்தியாவுக்கு பொறுந்தாது என்பதும் ஆணுக்கு எப்படி சம உரிமையோ பெண்களுக்கும் மதசார்பின்மை அரசுக்கு தானே தவிர தனிமனிதனுக்கு அல்ல என்றும் இதுபோன்ற தனிமனிதனின் சட்டத்திற்குள் பாஜக தொடரும் நிலை ஏற்ப்பட்டால் பாஜக அரசிற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

பேட்டி அல்தாஃபி

0 comments: