Wednesday, January 11, 2017

On Wednesday, January 11, 2017 by Tamilnewstv in    
திருச்சி ........ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவ-மாணவியரின் விழிப்புணர்வு பயணம்; 









கலெக்டர் அலுவலக சாலை ஸ்தம்பித்ததுஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் ஆயிரக்கணக்கில் திரண்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கண்டோண்மெண்ட், அய்யப்பன் கோவில் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களோடு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக்கோரியும் இன்று காலை கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்களின் பேரணிக்கு சமூக வலைதளங்களில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் இன்று காலை திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே திரண்டனர். பீட்டா அமைப்புக்கு தடை கோரிய பேனர்கள், 

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரிய பேனர்களுடன் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தும் விழிப்புணர்வு நடைபயணமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கலெக்டர் அலுவலக சாலைஸ்தம்பித்தது

0 comments: