Sunday, June 04, 2017
On Sunday, June 04, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய
மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள்
இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.
-----------
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணி இ.ஆ.ப.. அவர்கள் இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகும். நான் இங்கு வருவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றியுள்ளேன். தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாகவும்முறையாகவும்எ ந்தவித சிரமமும் இன்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
தமிழகத்தில் தற்போது வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு போதிய அளவு தமிழக அரசு நிதி வழங்கி இருக்கிறது. குடிநீர் பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் குடிநீர் பிரச்சனைக்கு போதிய அளவு நிதி வழங்கி இருக்கிறது. கூடுதலாக ஊரக நகர்புற வளர்ச்சி நிதியிலிருந்தும் குடிநீர் பிரச்சனை தீர்க்க நிதி வழங்கப்படுகிறது. நிதி ஒரு பிரச்சனையாக இருக்காது. குடிநீர் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு காணப்படும்.
மாவட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்ää திட்டங்கள்ää துறை வாரியாக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொன்றாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும். மேலும் மக்கள் நலக் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் எனது கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.மலர்விழி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


0 comments:
Post a Comment