Thursday, June 01, 2017

On Thursday, June 01, 2017 by Tamilnewstv in    

திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால்தலைகள்  பழம் பொருட்களின் மாபெரும் கண்காட்சி். திருச்சிராப்பள்ளி  பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஸ்ரீநிவாசா ஹாலில் ஜீலை 7, 8, 9 உள்ளிட்ட மூன்று நாட்களில் நடைபெறுகிறது. கண்காட்சியில் இந்தோ டேனிஷ் நாணயங்கள், இந்தோ டச்சு நாணயங்கள், இந்தோ பிரெஞ்சு நாணயங்கள், ஆங்கில கிழக்கிந்திய நிறும நாணயங்கள், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள், சுதந்திர இந்திய நணயங்களில் பொது பயன்பாடு மற்றும் நினைவார்த்த நாணயங்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அலுமினியம், நிக்கல், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உள்ளிட்ட நாணயங்களுடன் சேரர், சோழர், பாண்டியர் கால நாணயங்களும் காட்சிப் படுத்துகிறார்கள். பணத்தாள்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், வெனிசுலா, சாம்பியா , ஜிம்பாபே, இங்கிலாந்து, ஆப்ரிக்கா என இரு நூறு நாடுகளின் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. பழங்கால பொருட்களில் லாந்தர் விளக்குகள், தராசு, எடைக்கற்கள், படி, மரப்பாச்சி பொம்மைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட பல்வேறு பொருட்களும், தபால் தலைகளும் காட்சிப் படுத்துகிறார்கள். அனுமதி இலவசம் . அனைவரும் வருக. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளர் அப்துல் அஜீஸ், பாண்டி, முகமதுசுபேர், கமல கண்ணன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகிறார்கள்.

0 comments: