Friday, October 05, 2018

On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தில் உழைக்கும் பெண்கள் முன்னேற்ற நலச்சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தில் உழைக்கும் பெண்கள் முன்னேற்ற நலச்சங்கம் இணைந்தது. இதில் மாநில, மாவட்ட ஓன்றிய, கிராம நிர்வாகிகள் மற்றும்

விவசாயிகள், உழைக்கும் முன்னேற்ற நலச்சங்கங்கள் கலந்து கொண்டனர், இதில் விவசாயிகளின் விடிவெள்ளி பி.கே.தெய்வசிகாமணி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில் உழைக்கும் பெண்கள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் வனஜா முருகன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். இதில் ஜெயசுதா, சங்கீதா, ராணி, கோதை நாயகி, வலிவலம் சேரன், ராமக்கவுண்டர், தேவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த இணைப்பில் தெய்வசிகாமணி பேட்டியளித்தார். அப்பொழுது கூறுகையில் இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எங்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்தது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.


இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு துன்பங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை டெல்டா பகுதியில் கொண்டுவருவதை கடுமையாக கண்டிக்கிக்கிறோம். இந்த திட்டத்தை டெல்டாபகுதிகளில் கொண்டுவருதை விவசாய சங்கங்கள்  கண்டிப்பாக ஏற்காது.

ஹைட்ரோ கார்பன் திட்டமானது டெல்டாபகுதிகளை முழுமையாக பாலைவனமாக்கும் என்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆசியாவிலேயே மிகபெரிய பாசனபகுதியான காவேரியை கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் இந்த நடவடிக்கையை மத்திய மாநில அரசு கைவிடவேண்டும் மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பி.ஜே.பி.யை அடியோடு தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

மதுரை உச்சநீதிமன்றம் ஓரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் நல்ல நிலையில் உள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலம் பழுதடைந்துள்ளது. எனவே வருங்களாளங்களில் நல்லமுறையில் பாலங்கள் கட்டபட வேண்டும். பாலங்களால் விவசாயிகளுக்கு நன்மையே. பாலங்களை மத்திய மாநில அரசு யார் கட்டினாலும் உருதியான முறையில் கட்டவேண்டும்.

டெல்லியில் பி.ஜே.பி. விவசாயிகளுக்கு தொடர்ந்து விரோதபோக்கை கடைபிடித்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலை மாநில அரசு நிறுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளது. இதை மாநில அரசு ஏற்றுக்கொண்டு இந்த தேதிக்குள் நேரடி கொள்முதலை நிறுத்தி கொள்வோம் என்று கூறியுள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும். நேரடி கொள்முதலை எப்பொழுதும் மாநில அரசு கைவிடகூடாது என்றார். மாதம்முழுவதும் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களை திறந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது இதில் பொது விநியோகத்திற்கும், வனிகர்களுக்கு 24மணி நேரம் மின்சாரம் வழங்கப்படு வருகிறது. எனவே விவசாய்களுக்கு 12 மணி நேர மின்சாரம் வழங்கப்படவேண்டும். அதுவும் பகலில் வழங்கப்பட வேண்டும். இதில் மும்முனை இணைப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பேட்டி: பி.கே.தெய்வசிகாமணி.

farmers script

0 comments: