Friday, October 05, 2018

On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி-05.10.18


மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்

அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,

திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்

0 comments: