Sunday, October 07, 2018

On Sunday, October 07, 2018 by Tamilnewstv   
திருச்சி_07.10.18

திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று  ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.

போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

0 comments: